Mr. Anthonypillai Iruthayanathar

(ஓய்வுநிலை அதிபர்)

Anthonypillai Iruthayanathar

Date of Birth: 19 January 1953 - Deceased: 11 June 2025

முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை இருதயநாதர் அவர்கள் 11-06-2025 அன்று அயர்லாந்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவானி அந்தோனிப்பிள்ளை - செபமாலை தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து - மரியஞானசௌந்தரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மரியஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

அன்றூ நிதர்சன் (வைத்தியர் - அயர்லாந்து), ஆன் அர்ச்சனா (ஆசிரியை - முல்லை அம்பலவன் பொக்கணை மகா வித்தியாலயம்), இவான் சந்துரு (கனிஷ்ட கணக்காய்வாளர் WSK - கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மெகன் (வைத்தியர் - அயர்லாந்து), யனோச் (ஆசிரியர் - முல்லை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

எலனோறா, மக்டாரா (அயர்லாந்து), அஸ்விதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

புஸ்பத்திரேஸ், அருட்சகோதரி மரியராணி (திருக்குடும்ப கன்னியர் மடம் பண்டிவிரிச்சான்), பற்றிமாறோஸ் (கனடா), பத்திநாதர் (சுவிஸ்), இலங்கநாதர் (கனடா), யோகநாதர் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஞானப்பிரகாசம், அன்ரன் (கனடா), ஜெயராணி (சுவிஸ்), ஜெயந்தி (கனடா), மேரி றெஜினா (சுவிஸ்), பிலோமினா, காலஞ்சென்ற மேரி மாகிறேற், பொலின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மரியதாசன், ஜெயா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் முல்லைத்தீவு உண்ணாப்புலவு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/06/2025 04:00)