Mr. Anton Martinson Fernando
Date of Birth: 14 September 1965 - Deceased: 27 May 2026
"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்"
கொழும்பு-13 கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. என்டன் மார்ட்டின்சன் பெர்னாண்டோ அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இருதயசாந்தப்பன் பெர்னாண்டோ (ஆலந்தலை) - லீமா கலிஸ்டா பெர்னாண்டோ தம்பதியினரின் பாசமிகு மகனும்,
சாந்தி பெர்னாண்டோ அவர்களின் நேசமிகு கணவரும்,
ஷெனி, எஸ்டன், அன்டநிலா ஆகியோரின் நேசமிகு தந்தையும்,
ஸ்டேபான் அவர்களின் அன்பு மாமனாரும்,
எலினா அவர்களின் செல்ல தாத்தாவும்,
காலஞ்சென்ற லுட்மிலா, ஜெபர்சன், ஹேமர்சன் ஆகியோரின் பாசமிகு தம்பியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று இரவு 8:00 மணி முதல் இல- 61 புனித. பெனடிக்ட் மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13 இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் கொட்டாஞ்சேனை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் மாதம்பிட்டி கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
Aeston:- +94 77 139 8627
Jeffersen:- +94 72 243 2545
Lyon:- +94 77 330 5259
www.tamilthakaval.org
