Rev. Antony Fernando Bennet
(யாழ். மறைமாவட்ட குரு)
Deceased: 06 September 2026
யாழ். மண்டைதீவு 05ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அருட்தந்தை. அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்கள் 06-09-2026 கனடாவில் இறைபதம் அடைந்தார்.
1989ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் மாதகல், மயிலிட்டி, இளவாலை, பரந்தன் பங்குகளின் உதவி பங்குத்தந்தையாகவும் சண்டிலிப்பாய் பங்கின் பதில் பங்குத்தந்தையாகவும் , கரவெட்டி, மானிப்பாய், கிளிநொச்சி, பருத்தித்துறை, பரந்தன் பங்குகளின் பங்குத்தந்தையாகவும் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநராகவும் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநராகவும் கிளிநொச்சி, பருத்தித்துறை மறைக்கோட்டங்களின் முதல்வராகவும் வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமிலும் பணியாற்றியுள்ளார்.
அருட்தந்தையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
www.tamilthakaval.org
