Mr. Antony Francis Nilojan

Antony Francis Nilojan

Date of Birth: 14 September 2003 - Deceased: 20 December 2024

யாழ். மண்டைதீவு 01ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காணாமற்போன அன்ரனி பிரான்சிஸ் (அந்தோனி) - நிலானி தம்பதியினரின் அன்பு மகனும்,

அனோஜன், அனோஜா, சினோஜன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள்  23-12-2024  திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புகழுடல் மண்டைதீவு புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/12/2024 05:00)