திரு. அப்பாசெட்டி வீரப்பன் செல்வராஜா

(சமாதான நீதவான்)

அப்பாசெட்டி வீரப்பன் செல்வராஜா

தோற்றம்: 12 டிசம்பர் 1940 - மறைவு: 01 ஆகஸ்ட் 2026

திருகோணமலை - திருக்கடலுலூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அப்பாசெட்டி வீரப்பன் செல்வராஜா அவர்கள் 01-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்ணர், காலஞ்சென்ற வீரப்பன் - காமாட்சி தம்பதியினரின் பாசமிகு மகனும்,

பார்வதியம்மா (பாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஜெயரதன் (மன்சூர்), பிரேமரதன் (முகுந்தன்), கலாரதன் (ரமணன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகன்யா, சசிரேகா, சுலோசனாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜிந்தன்ராஜ், ரேனுஜன், ரேனுஜா, தனுஜா, பிரசாந்த், இலக்கியா, நித்தியா, அட்ஷயா, இசை, சபினேஸ் ராஜ், வித்தியராஜ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

அத்துடன், காலஞ்சென்ற தம்பிராஜா (தமிழ்நாடு), செல்லையா, செட்டியார், இராஜலட்சுமி ஆகியோரின் இளைய சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம் (பேங்கர்), குப்பநாச்சியார், துளசி, தெய்வானை, நேசம், ஆறுமுகம், சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 9654 521

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2026 00:00)