Mr. Appathurai Kumaraswamy

(முன்னாள் முகாமையாளர் - நெற்சந்தைப்படுத்தல் சபை, உதயன், ஈழநாடு பத்திரிகைகளின் நிருபர்)

Appathurai Kumaraswamy

Deceased: 23 August 2026

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கற்சிலைமடு, ஒட்டுசுட்டானை வாழ்விடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அப்பாத்துரை குமாரசுவாமி (J.P) அவர்கள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை - நகுலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்க்கண்டு - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மணிமேகலை அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற விஜிதி (முன்னாள் பிரதி அதிபர் - சைவ மங்கையர் வித்தியாலயம்), விமலன் (பிரான்ஸ்), விஜிதா (இலண்டன், முன்னாள் ஆசிரியை - இறம்பைக்குளம் மகா வித்தியாலயம்), விஜியா (ஆசிரியை - தெகிவளை தமிழ் மகா வித்தியாலயம்), Dr. வாசுகி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனேஸ்வரி, தியாகராஜா, காலஞ்சென்ற குணசிங்கம், கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணானந்தன், வசந்தராஜீவி, ஜெயக்குமார், மதிவண்ணன், நிரஞ்ஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜானன், மதுமிதா, கஹானா, ஹரிஷன், தக்ஷின்யா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

கிருஷிகா, ரஷிகா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-08-2026 திங்கட்கிழமை இல- C/4/2, Government Flats, Hospital Road, Dehiwala இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து, 25-08-2026 செவ்வாய்க்கிழமை முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, புதன்கிழமை அன்று மதியம் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

விமலன் (மகன்):- +33 619 183 893
விகிதா (மகள்):- +44 737 562 2405
விகியா (மகள்):- +94 77 719 0412
Dr. வாசுகி (மகள்):- +44 747 003 4681
கஜானன் (பேரன்):- +94 76 641 7370

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2026 00:00)