Mr. Appathurai Panchalingam
(Retired Principal - Jaffna Hindu College and Kokuvil Hindu college)
Date of Birth: 08 January 1936 - Deceased: 28 December 2025
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்பாத்துரை பஞ்சலிங்கம் அவர்கள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை - இரத்தினம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவகுரு - சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரஞ்சன் (கனடா), நிருபா (ஆசிரியை - அச்சுவேலி மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரஷாந்தி (கனடா), அருந்தவ ம்(ஆசிரிய ஆலோசகர் - வலிகாமம் கல்வி வலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவநீத், பிரஜீத், மதுரா, ரூபிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சோதிலிங்கம், மற்றும் செல்வநாயகி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-12-2025ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் ஆரம்பித்து தொடர்ந்து பூதவுடல் உரும்பிராய் கிட்ஸ் பார்க்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தகனக்கிரியைக்காக உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
