திரு. அப்புக்குட்டி கந்தசாமி
(கருணா மெட்ரஸ் உரிமையாளர்- கொழும்பு, கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் முன்னாள் தர்மகர்த்தா உறுப்பினர், கதிர்காம யாத்திரிகர் தொண்டர்சபை ஆயுட்கால உறுப்பினர்)
தோற்றம்: 27 ஏப்ரல் 1936 - மறைவு: 05 பெப்ரவரி 2021
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி கந்தசாமி அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லப்பா சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
குணரத்தினம், காலஞ்சென்ற இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருணாகரன்(லண்டன்), இராஜகருணா(லண்டன்), சந்திரகருணா(கொழும்பு), டேவிகா(பிரான்ஸ்), லேணுகா(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினோதினி(லண்டன்), இளமதி(லண்டன்), தாரகா(கொழும்பு), பிரசன்னா(பிரான்ஸ்), ஜகீதன்(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாக்கியம், நேசம்மா, காலஞ்சென்ற தனபாலசிங்கம், மங்களேஸ்வரி, இராஜகுலசிங்கம், யோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பூமணி, காலஞ்சென்ற அம்பிகாநிதி, தனலட்சுமி, செல்வநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
www.tamilthakaval.org
