திரு. அப்புத்துரை சிவசுப்பிரமணியம்
மறைவு: 26 டிசம்பர் 2024
யாழ். தச்சன் தோப்பு வேலம்பிராயைப் பிறப்பிடமாகவும், தாவளை இயற்றாலை கொடிகாமத்தையும் தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்புத்துரை சிவசுப்பிரமணியம் 26-12-2024 வியாழக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை - குஞ்சுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - இரத்தினேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
ரதியின் (கனடா) அன்புக் கணவரும்,
வைஸ்ணவியின் அருமைத் தந்தையும்,
கயூரனின் (கனடா) அன்பு மாமனாரும்,
சாயிசனின் (கனடா) பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 30-12-2024 திங்கட்கிழமை கனடாவில் நடைபெறும். அன்றையதினம் தில்லையம்பலம் இரத்தினேஸ்வரியின் இல்லத்தில் முற்பகல் 11.00 மணியளவில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
முகவரி:-
தாவளை இயற்றாலை,
மந்துவில்,
கொடிகாமம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
