Mrs. Apurvam Ponniah
Date of Birth: 05 July 1933 - Deceased: 26 December 2024
திருமதி. அபூர்வம் பொன்னையா அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி-திரவியம் தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற நீர்வை பொன்னையன் (பிரபல முற்போக்கு எழுத்தாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான போதரட்ணம், மோளரட்ணம் மற்றும் யோகரட்ணம், சண்முகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனுராதா, அருணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குசேலகுமாரன், சுரேந்திரன் ஆகியோரின் மாமியாரும்,
அரவிந்த், அக்ஷயன், தானியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, புஷ்பராணி, கிருஷ்ணலட்சுமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 - 12:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
