திரு. சோமசுந்தரம் அரவிந்தகோஸ் (சோமா)

சோமசுந்தரம் அரவிந்தகோஸ் (சோமா)

மறைவு: 15 மார்ச் 2026

எமது ஸ்ரீ மகாமாரி அம்மன் ஆலய நிறுவுனர் தர்மகர்த்தா திரு. சோமசுந்தரம் அரவிந்தகோஸ் (சோமா) அவர்கள் 15/3/2026 அன்று இறை பதம் அடைந்தார்.

இவர் புங்குடுதீவு 5 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இறுப்பிட்டி, ஜெர்மனி சார்புரூக்கனை வசிப்பிடமாகவும் கொண்டு, சோமாபிற்சேரியா மூலம் பிரபல்யமாகி தன் தனி முயற்சியால் #சார்புரூக்கன் சுல்ஸ்பாக் நகரில் ஸ்ரீ மகாமாரி அம்மன் ஆலயத்தை நிறுவி #சார்புரூக்கன் வாழ் மக்கள் வழிபட வழிகாட்டியாக இருந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற அமரசிங்கம் அமராவதி தம்பதிகளின் மருமகனும்,

கனகாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
 
ஆரண்யா , சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
சஞ்சி, சபி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
அஜய், மாயா , ரியா , நிஷா , அக்ஷயா , நேகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
 
தாகூர், திலக், மோகன், லிங்கன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Isha Crematorium Chennai Kakkan Nagar, Besant Nagar, Chennai, Tamil Nadu 600090 எனும் முகவரியில் நடைபெறும்.
 
நோய்வாய்ப்பட்டு இருந்த காரணத்தினால் சென்னையில் தங்கி வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார்.
 
இடி என இறங்கிய செய்தி அவர் காலமாகிவிட்டார் என வந்தது.
 
இப்பூமியில் பிறந்தவர் எல்லோருக்கும் மரணம் என்பது நியதியே.  பிரிவால் துயருறும் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரவிந்தகோஸ் (சோமா) ஐயாவின் ஆன்மா இறைவன் அடியில் இழைப்பாறி ஆன்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல மகாமாரி அம்மனைப் பிரார்த்தனை செய்வோமாக.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2026 17:18)