Mr. Ariyarathinam Thatparanathan
Date of Birth: 07 February 1939 - Deceased: 19 November 2024
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், இலுப்பையடிச் சந்தி, தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரியரத்தினம் தற்பரநாதன் அவர்கள் 19-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று தெஹிவளையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரத்தினம்-ஆசைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா-ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜெயதேவி அவர்களின் அன்புக்கணவரும்,
தாட்ஷாயினியின் அன்புத்தந்தையும்,
கணாதிபனின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சற்குணநாதன், மனோன்மணி, பத்நாதன், சிவஞானமணி, ஜெயமணி, ரங்கநாதன் மற்றும் ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 21-11-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
