Mrs. Ariyarathinam Kasilingham

(Retired Teacher)

Ariyarathinam Kasilingham

Date of Birth: 24 October 1930 - Deceased: 24 December 2024

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், வறுத்தவிளான், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அரியரத்தினம் காசிலிங்கம் அவர்கள் 24-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா-தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு.திருமதி தங்கராசா-சௌபாக்கியவதி தம்பதியினரின் மருமகளும்,

காசிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அழகரட்ணம், வெற்றிவேலாயுதபிள்ளை ஆகியோரின் அன்புச்  சகோதரியும்,

சுரேஷ் (சுவிஸ்), ரமேஸ் (கொழும்பு), ஷகிலா (ஆசிரிய ஆலோசகர்-கொழும்பு) சொரூபா ஆகியோரின் அன்பு தாயாரும்,

சீதா லக்ஷ்மி (சுவிஸ்), சிவகுமாரன் (சிவா மல்டி ஷொப் - தையிட்டி), ராஜ் மோகன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனிற்றா, ஸ்தேவன், ஸ்கோரன் லில்லி, டிலக்ஷன், நிலோஜன், நிசாங்கன் - சாத்விகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-12-2024 வியாழக்கிழமை மதியம் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும், 27-12-2024 வெள்ளிக்கிழமை காலை 8:30 - 11:00 மணி வரையும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:-குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/12/2024 05:00)