திரு. அருளையாபிள்ளை கலாநிதி ஆனந்தகுமாரசாமி
மறைவு: 02 ஜூலை 2025
"ஆண்டவனை நன்றியுடன் நேசிப்பவன் ஆண்டவன் தினத்தில் ஆண்டவன் பாதத்தில் சென்றடைகிறார் ஓம் நமசிவாய"
யாழ். காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும், மருதடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளையாபிள்ளை கலாநிதி ஆனந்தகுமாரசாமி அவர்கள் 02-07-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளையாபிள்ளை (விதானையார்) - நாகரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், ஐயாத்துரை - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கலாநிதி சரோஜாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவபாதசுந்தரம் (சிங்கப்பூர்), நமசிவாயம்பிள்ளை மாஸ்டர் (இலங்கை), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், பானுமதி மற்றும் சிவபாலன், காந்திமதி,பிரேமாவதி, ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிக்க மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-07-2024 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது மருதடி, காரைநகரில் உள்ள இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- நமசிவாயம்பிள்ளை.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
