திரு. அருளம்பலம் ராம்குமார் (பாலா)
தோற்றம்: 06 மே 1938 - மறைவு: 29 ஜூன் 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், குச்சம் ஒழுங்கை வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த திரு. அருளம்பலம் ராம்குமார் அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம் தண்டையல் - கண்ணகைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமாமுகப்பெருமாள் - தெய்வநாயகி தம்பதியினரின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்ற வசந்தாதேவி (தவம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, மகாலட்சுமி, தனலட்சுமி ஆகியோரின் அருமைத் தம்பியும்,
காலஞ்சென்றவர்களான அப்பு சுந்தரம், இரத்தினவடிவேல், சாம்பசிவம் மற்றும் இரத்தினவேல், ஜெயமணிதேவி, தவராஜா, வனிதாதேவி, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலஞ்சென்ற சிவா ஆகியோரின் அன்புமிகு மைத்துனரும்,
கலைவாணி (யசோ-இலண்டன்), லோகேஸ்வரி (வண்ணம்-மெல்பேர்ண்), சத்தியகுமார் (ரமணன்-இலண்டன்), ஜெயரூபவதனி (வதனி-சிட்னி), சுஜிதா (கீதா-இலண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
கருணானந்தன் (கண்ணன்), பாலச்சந்திரன் (பாலு), சசிகலா, ஜதீஸ், நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மேனகா, ராதிகா, செந்தூரன், ஹரணி, ராகன், ஆரூஷன், கிருஷ்ணா, லேகா, சன்விகா ஆகியோரின் அன்புக்குரிய பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-07-2026 புதன்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை Imperial Sports Ground (Bishopsford Road, Morden, SM4 6BF) இந்து சமய ஆசாரமுறைப்படி நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் Croydon Crematorium (Mitcham Road, Croydon CR9 3AT) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
