Rev. Arulanandam Thevathasan
Date of Birth: 24 October 1950 - Deceased: 27 August 2026
யாழ். சுன்னாகத்திலுள்ள சூறாவத்தைக் கிராமத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட அருட்தந்தை. அருளானந்தம் தேவதாசன் அடிகளார் அவர்கள் 27-08-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராஜா அருளானந்தம் - ஆரோக்கியநாதர் மேரி திரேசா தம்பதியினரின் மகனும் ஆவார்.
25-08-1980 இல் அன்றைய திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர், மறைந்த பேரருட்திரு லீயோ இராஜேந்திரம் அன்ரனி ஆண்டகையினால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அருட்தந்தை அவர்கள் ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம், திருகோணமலை புனித மரியாள் பேராலயம், பெரிய புல்லுமலை தூய செபமாலை அன்னை திருத்தலம், நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயம், புளியந்தீவு புனித மரியாள் பேராலயம், தாண்டன்வெளி புனித காணிக்கை அன்னை ஆலயம். தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயம், புணானை அந்தோனியார் ஆலயம், கல்முனை திரு இருதயநாதர் ஆலயம், சத்துருக்கொண்டான் இறைஇரக்கத் திருத்தலம், தேற்றாத்தீவு புனித யூதாததேயு திருத்தலம் ஆகிய பங்குகளில் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு மறைமாவட்ட சமூகத் தொடர்பு நிலைய இயக்குனராகவும், திருமலை மறைக்கோட்ட இளைஞர் ஒன்றியத்தின் இயக்குனராகவும், சிறிய குருமட அதிபராகவும், மறைக்கல்வி நடுநிலைய இயக்குனராகவும், மறைக்கோட்ட முதல்வராகவும், மறைமாவட்ட குருமுதல்வராகவும், சத்துருக்கொண்டான் அன்பின் இல்ல பொறுப்பாளராகவும் பல பொறுப்புள்ள பணிகளை ஏற்று பணியாற்றினார்.
இறுதி நல்லடக்க வழிபாடுகள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து கூட்டுத்திருப்பலி திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை தலைமையில் புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்று, சரீரம் ஆலையடிச்சோலை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- ஆயர் இல்லம், மட்டக்களப்பு.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
