திரு. அருளானந்தம் சண்முகானந்தம்
தோற்றம்: 18 அக்டோபர் 1951 - மறைவு: 24 மார்ச் 2026
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Humberg, Wenden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தம் சண்முகானந்தம் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் - முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கரம்பொன் கந்தையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
21-03-2026 அன்று காலஞ்சென்ற செல்வமணி அவர்களின் ஆருயிர் கணவனும்,
தர்மிலா (முனைவர்-PhD), தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயகுமார், ஜதீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவராஜகுமாரி (யாழ்ப்பாணம்), சதானந்தன் (ஓய்வு பெற்ற அதிபர்-Central College இணுவில்), நற்குணானந்தம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தேவராணி, சுப்ரமணியம் ஆகியோரின் அன்புச மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயமணி, தவமணி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜானவி, தியானா, ஓவியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
துஷ்யந்தன், கிருஷாந்தன், நிதர்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
Dr.சுதர்சினி, காலஞ்சென்ற சுதர்சன், Dr.சுதாகர் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.30 - 2.00 மணி வரை Krematorium Feuerbestattung Sauerlan (Werkshagener Str.25 58515 Lüdenscheid, Germany) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
