திருமதி. அருள்நங்கை சண்முகநாதன்

(ஆரியகுளம் யாழ்ப்பாணம் புதிய உயர்கல்லூரி நிர்வாக இயக்குனரும்,பிரபல இந்து நாகரீக விரிவுரையாளர்)

அருள்நங்கை சண்முகநாதன்

தோற்றம்: 31 ஜூலை 1951 - மறைவு: 27 அக்டோபர் 2022

யாழ் ஆனைக்ககோட்டை ஆறுகால் மடத்தைப் பிறப்பிடமாகவும், கட்டைப்பாலி லேன் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும்  கொண்டவரும், ஆரியகுளம் யாழ்ப்பாணம்  புதிய உயர் கல்லூரி நிர்வாக இயக்குரும், பிரபல இந்து நாகரீக விரிவுரையாளருமான திருமதி அருள்நங்கை சண்முகநாதன் அவர்கள் நேற்று 27-10-2022ம் திகதி  வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் சண்முகநாதன் புதிய உயர் கல்லூரி இயக்குனர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
காலஞ்சென்ற சந்துதன்,தேவசந்துதன், தேவசாத் விகன் (ஏஞ்சல் சர்வதேசபாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் விஜலக்ஷ்மி தம்பதியரின் பாசமிகு மகளும்,
 
ஏழாலை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,

பாலபாஸ்கரன் (புதிய உயர் கல்லூரி முகாமைத்துவப் பணிப்பாளர்), காலஞ்சென்ற அருள்வேல் மற்றும் கமலாம்பிகை (பிரான்ஸ்), இராஜநங்கை(ஆசிரியை, மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை), காலஞ்சென்ற செந்தில்குமாரன் ஆகியோரின் மூத்த சகோதரியும், 
 
இராகினி, செல்வரஞ்சன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
பாலகார்த்திகா (UK), பாலமயூரா (ஆசிரியர்,யாழ் உடுவில் முருகமூர்த்தி வித்தியாலயம்),
பாலரஜீவன் (UK) ஆகியோரின் அன்பு மாமியும்,
 
சர்மிளா (பிரான்ஸ்), ஜெயந்தன் (பிரான்ஸ்), சிந்துஜன்( NDB வங்கி), விதுஷன்(திறந்த பல்கலைக்கழகம்,யாழ்ப்பாணம்) ஆகியோரின் பெரிய தாயாரும்,
 
சிவகேதீசன் (UK), ஜெயதீபன் (செலிங்கோ காப்புறுதிக் கம்பனி- சாவகச்சேரி), மதுசா(UK) ஆகியோரின் பெரிய தாயாரும்,
 
காலஞ்சென்ற சிவமணி (சிங்கள ஆசிரியர்), இராமச்சத்திரன், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், திலகமணி, செல்வமணி, செல்வராசா, பத்மநாதன் (நிர்வாக இயக்குனர் பொருளியற் கல்லூரி யாழ்ப்பாணம், சுன்னாகம், BARATHY சித்தங்கேணி), மோகனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், நவமணி மற்றும் நவமணிதேவி, ஞானக்கொழுந்து (ஓய்வுபெற்ற ரெலிக்கொம் பணியாளர்), சசிகலா (ஓய்வுபெற்ற கொமர்ஷல் வங்கி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
பகீரதன் (மாவட்ட செயலகம்,யாழ்ப்பாணம்), மாதங்கி, தர்ஷன் (கணக்காளர்,கொழும்பு ) ஆகியோரின் அன்பு மாமியும்,
 
தவசீலன் (மாவட்ட செயலகம்,யாழ்ப்பாணம்),ஜெயகாந்தன் (புதிய உயர் கல்லூரி பணிப்பாளர்), தவரஞ்சன் (S.S. Tourrist in யாழ்ப்பாணம்), ஷோபனா ( Q A Engineer பம்பலப்பிட்டி), தர்மிகா (Canada), ஆர்த்திகா, அபிராம் (ஊவா வெல்லச பல்கலைக்கழகம்), தரணீசன் (யாழ் இந்துக் கல்லூரி) ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
 
 
அன்னாரின் பூதவுடல்  அஞ்சலிக்காக அவரது இல்லத்தில்  வைக்கப்பட்டு 30-10-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.9.30 மணியளவில்  கிரியைகள் நடைபெற்று நல்லடக்கத்திற்காக மு.ப.11.30 மணியளவில் காக்கைதீவு  கரையான்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

விலாசம்:-
 
சண்முகநாதம், கட்டைப்பாலி லேன்
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2022 08:27)