Mrs. Arulrani John (Jasmini)
(Former Secretary, Upali Organization)
Date of Birth: 27 September 1961 - Deceased: 04 September 2024
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருள்ராணி அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம்-புஸ்பமலர் தம்பதியினரின் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-எஸ்தர் ரோஸ் தம்பதியினரின் மருமகளும்,
பாலேந்திரன் ஜோன் அவர்களின் அன்பு மனைவியும்,
சர்மிளா, ஜோர்ஜ் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குலம், சாம், மஞ்சுளா, யோகன் மற்றும் சத்தி செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்ஷன், தீர்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராயா, கேரன், டுருவ், கொஹவ் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இல-36, குணசேகர மாவத்தை, வத்தளை (Srina Palace) இல் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-09-2024 வௌ்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
