Mr. Arulrasa Thuraisingham (Peter)

Arulrasa Thuraisingham (Peter)

Date of Birth: 18 September 1968 - Deceased: 06 July 2025

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், இல - 58/2, ரக்கா வீதி,  யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருள்ராசா துரைசிங்கம் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் - லீலா தம்பதியினரின் அன்பு மகனும், 

குணசிங்கம் (தவா - பிரான்ஸ்), ஜேசுதாசன் (பாலன்), காலஞ்சென்ற மாசில்லா (ரூபி) ஆகியோரின் சகோதரரும்,

ராசாத்தி (பிரான்ஸ்), ராசாத்தி ஆகியோரின் மைத்துனரும்,

டென்சி - இருதி, டயானி - கமல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிசாந்தன், நிரோஜினி - கிரிதரன், லக்சனா - பிரசீலன், டர்சிகா, மயூரிகா, நர்மிலன், எனோச், யூலியன் ஆகியோரின் சித்தப்பாவும்,

சேர்ஜியஸ், அத்விகன், அத்விகா, திதிசா, சஷ்மிகா ஆகியோரின் பாசமிக்க பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் புனித யுவானியார் ஆலயம் சுண்டுக்குளியில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- டென்சி (மருமகன்) 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/07/2025 04:00)