திரு. ஆறுமுகம் அரியரெத்தினம்

(தலைமைப் பணிப்பாளர்-இலங்கை புகையிரத சேவை திணைக்களம்)

ஆறுமுகம் அரியரெத்தினம்

தோற்றம்: 01 நவம்பர் 1943 - மறைவு: 17 அக்டோபர் 2024

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் அரியரெத்தினம் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் (தபால் ஓய்வூதியர்)-கனகம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரரும்,

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா-செல்லமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

ஜெகதீஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஜந்தா, பரநிரூபன் (ரூபன்), யசீகரன், யசிந்தா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

நர்மதா, ஜீவானந், ஜீவராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரீஸ், மகீஸ், பரணீஸ், ஜெனலியா, ஜெஷான், நிக்லன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான பத்மலோஜினி, தையல்நாயகி, பரநிரூபசிங்கம், காராளபிள்ளை (ஓய்பெற்ற தபாலதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான முதலித்தம்பி, சின்னத்துரை மற்றும் கமலாதேவி, மங்கையற்கரசி (கொழும்பு), காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன், இராசலிங்கம், சண்முகநாதன் மற்றும் செல்வநாதன் (கனடா), பரமேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற கதிர்காமநாதன் (KK- கனடா) மற்றும் பேரின்பநாதன் (சுவிஸ்), குணேஸ்வரி (பிரித்தானியா), சிவலிங்கநாதன் (பிரித்தானியா), காலஞ்சென்ற இலங்கநாதன் மற்றும் இராஜேஸ்வரி (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

முகுந்ததாசன், சிவானந்தன், விஜயசேகர் ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00-8.00 மணி வரை Ogden Funeral Homes (4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 28-10-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.30-10.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/10/2024 04:00)