திரு. ஆறுமுகம் கிருஸ்ணமூர்த்தி
(ஓய்வுபெற்ற கிளை முகாமையாளர்- நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்)
தோற்றம்: 17 மார்ச் 1946 - மறைவு: 13 பெப்ரவரி 2022
யாழ். சுழிபுரம் கல்லை வேம்படியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கதிரமலைச் சிவன்கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கிருஸ்ணமூர்த்தி அவர்கள் 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பார்வதி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஞானகௌரி (ஜேர்மனி), றவிக்குமார் (ஜேர்மனி), சிவகௌரி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராஜதுரை, பூமாதேவி, ஞானாம்பிகை, ஆனந்தராசா ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம், நடராஜா, சரோஜாதேவி, வரதராஜா, பத்மாவதி (கனடா), ஜெயந்தி, விக்கினேஸ்வரன் (இந்தியா) ஆகியோரின் மைத்துனரும்,
கண்ணன் (ஜேர்மனி), பகீதரன் (ஜேர்மனி), சாரனா (ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும்,
சஞ்ஜய், காயத்திரி, அருளினி, ஹரிராம், ஜானுகா,சந்தோஷ், ஆரனா, இஷானி ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2022 வியாழக்கி்ழமை அன்று கதிரமலைச் சிவன்கோவிலடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுழிபுரம், திருவடிநிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
