Mr. Arumugam Kulendranayagam
(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்)
Date of Birth: 26 May 1949 - Deceased: 29 November 2024
யாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு நெல்லியோடை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் குலேந்திரநாயகம் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும்-தில்லைநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
உருத்திரராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், செல்வராணி, சபாநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனுசா (திருகோணமலை), பானுசா (OIC in SCS -வவுனியா), வேணுசா, தேனுசா (கனடா), ரேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதீஷ், திலீபன், யானுசன் (கனடா), அஷந்ததாஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஜித், திரௌசிக், தனீக்ஷா, ஆத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ,
உருத்திரன், யோகன், சந்திரன், விமலராணி, வசந்தன், வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஆவரங்கால் கருதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி:-
நெல்லியோடை,
அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
