திரு. ஆறுமுகம் மகேந்திரன்

(முன்னாள் உரிமையாளர்- இந்திரா என்ஜினியர்ஸ்)

ஆறுமுகம் மகேந்திரன்

தோற்றம்: 00 0000 - மறைவு: 19 அக்டோபர் 2024

யாழ். சங்கரத்தை, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் மகேந்திரன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு கனிஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி-சுருதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

குசேலா அவர்களின் பாசமிகு ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், தங்கரத்தினம், M.A.வேலுப்பிள்ளை,  M.A.சுப்பிரமணியம், Dr. M.A. இராஜரட்ணம், செல்லத்துரை, தர்மலிங்கம், புவனேஸ்வரி  ஆகியோரின் அன்பு சகோதரனும்,

திவாகரன் (பொறியிலாளர்-ஐக்கிய அமெரிக்கா), வைத்திய கலாநிதி ரஜனி (பொது வைத்திய நிபுணர்-யாழ் போதனா வைத்தியசாலை), வைத்திய கலாநிதி சுதர்சனா (அவுஸ்திரேலியா), கிரிஜா (சிரேஷ்ட விரிவுரையாளர் விவசாய பீடம்-யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

ஜோதிகா (பொறியிலாளர்-ஐக்கிய அமெரிக்கா), வைத்திய கலாநிதி ஸ்ரீகிருஷ்ணா (என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர்-யாழ் போதனா வைத்தியசாலை), ஆரூரன் (கணக்காளர்-அவுஸ்திரேலியா), நிசாந்தன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் -மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வினி, அருணன், ஸ்ரீவாசனி, ஸ்ரீவைஷ்ணவி, அருக்ஷ்ன், அஐந்தன், ஆர்த்திகன், அக்ஷ்யா, ஆதித்யன், பிரதீசன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று,  புகழுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/10/2024 04:00)