திரு. ஆறுமுகம் மகேஸ்வரன்

(இளைப்பாறிய தபால் அதிபர்)

ஆறுமுகம் மகேஸ்வரன்

தோற்றம்: 29 ஏப்ரல் 1939 - மறைவு: 11 ஜூலை 2025

யாழ். சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் மகேஸ்வரன் அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - செல்லமுத்தாச்சி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான ஓவசியர் ராஜதுரை - மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

செந்திசெல்வம் (குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன் (பிரபா), பாஸ்கரன் (பாபி), மஞ்சுளா (மஞ்சு) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

மாலினி, கோசலை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரசாந்தி, சிவகாமி, பிரணவி, ஆர்த்திகா, சர்மிளா, ஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

இலாஜாவின் ஆசைப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான யோகேந்திரன் (கனடா), திருஞானசம்பந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு அண்ணனும்,

தவனேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற நிர்மலாதேவி ஆகியோரின் மைத்துனரும்,

சிறீகாந்தமலர் (இலண்டன்), காலஞ்சென்ற சபாரட்ணம், சிறீகாந்தராஜா (கொழும்பு), குகனேஸ்வரி (கொழும்பு), செந்திமலர் (சிட்னி), காலஞ்சென்ற குணரட்ணம் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரை Pinegrove Memorial Park (North Chapel, Kingston Street, Minchinbury) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/07/2025 04:00)