திரு ஆறுமுகம் பவளவிக்னேஸ்வரன்
மறைவு: 15 பெப்ரவரி 2026
யாழ். செங்குந்தர் வீதி கரவெட்டி கிழக்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் பவளவிக்னேஸ்வரன் அவர்கள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரி அன்று நெதர்லாந்தில் சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - பவளம் ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பவளமலர், பவளராணி மற்றும் பவளஈஸ்வரன், பவளரதி, பவளபுஸ்பம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பாலகௌரியின் அன்பு மைத்துனரும்,
சுஜீந்திரன், சுபாங்கிதன் அவர்களின் பாசமிகு மாமாவும்,
பானுஜன் அவர்களின் ஆசை சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியையும் தகனக்கிரியையும் செவ்வாய்க்கிழமை 24/02/2026 அன்று நெதர்லாந்தில் (Uitvaartcentrum Haarlem, Parklaan 36, 2011 KW Haarlem) என்ற இடத்தில் நெதர்லாந்து நேரப்படி பி.ப 1.00 - 4.30 மணிவரை நடைபெறும்.
24-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று செங்குந்தர் வீதி, கரவெட்டியில் அமைந்துள்ள அன்னாரின் பிறந்த வீட்டில் ஆத்மா சாந்தி பிரார்த்தனை இடம்பெறும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் - குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
