திரு ஆறுமுகம் இராசநாயகம்
(ஓய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்)
மறைவு: 08 நவம்பர் 2020
யாழ் நீர்வேலி தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் ஆறுமுகம் இராசநாயகம்அவர்கள் 08-11-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான சிவராசா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகலட்சுமி(சுசீலா) அவர்களின் பாசமிகு கணவரும்,
தயாபரன்,தயானந்தி,பராபரன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
திவாகரன்,சர்மிளா,விஜயலதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனஞ்செயன்,இந்துஜா,நித்தியா,கார்த்திகா,லக்ஸியா சாகித்தியா,கார்த்தீபன் ஆகியோரின் அன்பு பேரனாரும்,
காலஞ்சென்ற செல்வராணி,மற்றும் சபாநாயகம்,குலேந்திரநாயகம் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான நமச்சிவாயகம், கோடீஸ்வரி மற்றும் உருத்திரராணி , சற்குணலிங்கம்,
இந்திராதேவி, சந்திராதேவி, சிந்தாதேவி, ஜெயக்குமார், சாந்தகுமார், அஞ்சலிதேவி நிரஞ்சலிதேவி,சிவகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 09-11-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பூதவுடல் சீயக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தகவல்:- குடும்பத்தினர்
021 223 0058
விலாசம்:-
கரந்தன் வீதி,
நீர்வேலி தெற்கு,
நீர்வேலி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2020 04:10)
