திரு. ஆறுமுகம் இராசதுரை
தோற்றம்: 23 ஆகஸ்ட் 1947 - மறைவு: 10 டிசம்பர் 2024
யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் இராசதுரை அவர்கள் 10.12.2024) செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - தில்லைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
கணபதிப்பிள்ளை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வசந்தமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
இராசரத்தினம், காலஞ்சென்ற தளையசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஐங்கரன் (பிரான்ஸ்), சர்மினி, பன்னிருகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனுசா (பிரான்ஸ்), இளங்குமரன் (ஆசிரியர் - யா/கைதடி குருசாமி வித்தியாலயம்), கிறிஸ்ரினா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
திக்சிகா (பிரான்ஸ்), அஜய் (பிரான்ஸ்), ஆகாஸ் (பிரான்ஸ்), அக் ஷயன், லக்ஷயன், றயான் (பிரான்ஸ்), எபான் (பிரான்ஸ்), மைவா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவசோதியம்மா, பொன்னம்மா, காலஞ்சென்றவர்களான தில்லை நடராஜா, சிவஞானசுந்தரம், புஸ்பமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2024 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஊற்றல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
முகவரி:-
தில்லையம்பதி
ஆறுமுக பூங்கா,
கைதடி கிழக்கு, கைதடி.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
