திரு. ஆறுமுகம் செல்வரட்ணம்
(Executive Officer- Thai Airways International)
மறைவு: 20 மே 2025
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் செல்வரட்ணம் அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமநாதன் - தங்கம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற சீதாலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. மாலதி (இலண்டன்), சிவச்செல்வி (அவுஸ்திரேலியா), திருமகள், அருள்செல்வி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
நந்தகோபன், அச்சுதானந்தன், சாந்தகுமார் (Greenways Lanka - உரிமையாளர்), வசீகரன் ஆகியோரின் மாமனாரும்,
Dr. கோபிஜா, சங்கவி, கஜராஜ், அடறியன், விதுரன் ஆகியோரின் அருமைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, நவமணி, சின்னம்மா, நடராஜா, பரராஜசிங்கம், அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இராஜேஸ்வரி (ஐக்கிய அமெரிக்கி), காலஞ்சென்றவர்களான தங்லக்ஷ்மி, பொன்னுத்துரை, தம்பு, அருந்ததி, திருஞானம் ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் (No-30, De Fonseka Road, Colombo-04) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1:45 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
