Mr. Arumugam Chinniah Subramaniam
(இளைப்பாறிய அரச நிர்வாக அலுவலர் - சுகாதார திணைக்களம், அகில இலங்கை சமாதான நீதவான்)
Date of Birth: 02 April 1937 - Deceased: 29 December 2024
யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சின்னையா சுப்பிரமணியம் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா-தங்கமுத்து தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்ற கந்தையா-தெய்வநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன், வர்மா, ரேணுகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வைதேகி, தட்சாயினி, ஹரிதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கருணிகா, ஈஷா ஆகியோரின் அன்பு பேரனும்,
செல்வராசாவின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி, ஆறுமுகம், காலஞ்சென்ற வீமராஜன், குலராஜன், பாலராஜன், ஆனந்தராஜன், ஜெகராஜா, விக்கினேஸ்வரி, விக்னராஜா, தனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
