திரு. ஆறுமுகம் சிவபாலன் (பவன்)
மறைவு: 12 டிசம்பர் 2025
யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சிவபாலன் அவர்கள் 12-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் (சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலய அரங்காவளர்) - சாவித்திரி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,
புளோரன்ஸ் அவர்களின் பாசமிகு கணவரும்,
அனை அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிற்சபேசன், சிவபூசணம் (கனடா), சிவானந்தம், காலஞ்சென்ற சிவகெங்காதரன் (இராதா ஐயா), சிவனேசசெல்வி, சிவனேசம், சிவகுமார், சிவமலர் (சுவிஸ்), சிவமங்கை ஆகியோரின் பாசமிகு தம்பியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஸ்ட்ராஸ்பர்க் (Strasbourg) - பிரான்ஸில் 15-12-2025 திங்கட்கிழமை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
