Mr. Arumugam Sundralingam
Date of Birth: 20 March 1950 - Deceased: 25 January 2025
யாழ். காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனையைப் பிறப்பிடமாகவும், இல-99, சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சுந்தரலிங்கம் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்லப்பா (அப்பி-கனடா), சதீஷன் (கண்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தனபாலன், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அஜேய், பவீஷன், மதுஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
