திரு. ஆறுமுகம் சுந்தரலிங்கம்

ஆறுமுகம் சுந்தரலிங்கம்

தோற்றம்: 20 மார்ச் 1950 - மறைவு: 25 ஜனவரி 2025

யாழ். காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனையைப் பிறப்பிடமாகவும், இல-99, சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சுந்தரலிங்கம் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மிளா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்லப்பா (அப்பி-கனடா), சதீஷன்  (கண்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தனபாலன், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

அஜேய், பவீஷன், மதுஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2025 05:00)