திரு. ஆறுமுகம் தேவராசா
மறைவு: 23 நவம்பர் 2024
யாழ். காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும், சயம்பு வீதியை வசிப்பிடமாகாவும் கொண்ட திரு. ஆறுமுகம் தேவராசா அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்-தையல்முத்து தம்பதியினரின் இளையமகனும்,
காலஞ்சென்ற செல்லையா-செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,
நேசரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியானந்தன் (ஆசிரியர்-யா/காரை மெய்கண்டன் வித்தியாலயம்), சத்தியசீலன் (அமெரிக்கா), சத்தியபாமா (கனடா), வேணுகோபாலன் (கூட்டுறவு அபிவிருந்தி உத்தியோகத்தர், AIA Insurance கிளிநொச்சிக் கிளை), சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தினி (ஆசிரியர்-யா/காரை இந்துக் கல்லூரி), கலைமகள் (அமெரிக்கா), நடராஜா (Royal king Restaurant, Amients. Reception Hall-கனடா), ஸ்ரெப்நி (அபிவிருத்தி உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்), கிருசாந்தன் (மலேரியா தடுப்புப் பிரிவு, நல்லூர் பிரதேச சபை) ஆகியோரின் பாசமிகு மாமனரும்,
கோபிகாந், ஹரிஷ்காந், சாமந்தி, சானுகா, கதிர், வைஷ்ணவி, கேனுயன், திவிகன், சஜிந்தன், தஸ்மிகா, சயிதா, கம்சாயினி ஆகியோரின் பேரனும்,
திருநாவுக்கரசு (பரமு - தபால் ஊழியர்) அவர்களின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் காலை 7.30 மணியளவில் நடைபெற்று, புகழுடல் காரைநகர் ஆலங்கன்று இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
