திரு. அருணாச்சலம் செட்டியார் மகேஸ்வரன்

(முன்னால் இலிங்கநகர் கிராமோதய சபை - தலைவர், சமாதான நீதிவான் (JP), முன்னால் பாதுகாப்பு உத்தியோகத்தர் - வடகிழக்கு மாகாண பிரதம செயலகம்)

அருணாச்சலம் செட்டியார் மகேஸ்வரன்

தோற்றம்: 20 ஜனவரி 1951 - மறைவு: 17 நவம்பர் 2026

குருநாகலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை - செல்வநாயகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அருணாச்சலம் செட்டியார் மகேஸ்வரன் அவர்கள் 17-11-2026 செவ்வாய்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம் செட்டியார் - கமலாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம் செட்டியார் - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நீலலோஜினி (வள்ளி) அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்றவர்களான பூராஜா, மனோன்மணி மற்றும் பரஞ்சோதி ஆகியோரின் அன்பு சகோதானும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை, கிருஸ்ணசாமி, உத்தண்டி செட்டியார், செல்வராஜா, இராமலிங்கம் மற்றும் விஸ்வநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரமோகன், யோகச்சந்திரன், சிவாஜினிகஸ்தூரி ஆகியோரின் அன்பு தந்தையாரும்,

பிரமிளா, லதாஜினி, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷஞ்சய், ஸ்ருதி, அக்ஷய், டேனுஸ்கா. தக்ஷனா. கவிஷா, கீர்த்திகன், இலக்கியா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று இல- 946/1, பாடசாலை வீதி, செல்வநாயகபுரம், திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் திருவுடல்  திருகோணமலை இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2026 00:00)