திரு. அருணாசலம்பிள்ளை

அருணாசலம்பிள்ளை

தோற்றம்: 28 செப்டம்பர் 1937 - மறைவு: 15 ஜூன் 2026

இந்தியா - திருச்சி மாவட்டம் ஓமாந்தூர் கிராமம், சமயமந்திரி கோத்திரம் (முன்னாள் வத்துகாமம்) கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. அருணாசலம்பிள்ளை அவர்கள் 15-06-2026 திங்கட்கிழமை அன்று அதிகாலை 4.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அரவாண்டியாபிள்ளை (அபினிமங்களம் அரவாயி அம்மன் கோவில் பூசாரியார்) - தொட்டாச்சி அம்மாள் தம்பதியினரின் மூத்த மகனும், கம்பளை வெளியங்கந்தை காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை - மாரியாயி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,

சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்தகுமார் (Rower International, Old Moor Street, Colombo 12), சர்மிளாதேவி, அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லெட்சுமண மோகன் (Water Board Ratmalana), துவாரகா ஆறுமுகம் (U.S.A), சிந்துஜா ஷாமினி ஆகியோரின் மாமனாரும்,

திருச்சி ராமநாதன், ஓமாந்தூர் காலஞ்சென்ற ஜெகநாதன் ஆகியோரின் சகோதரரும்,

பெரியசாமி, பத்மநாதன் (Champhion Traders, Colombo 12) ஆகியோரின் மாப்பிள்ளையும்,

காலஞ்சென்ற ஆடிட்டர் சாம்பசிவம்பிள்ளை - அமராவதி, சச்சிதானந்தன் - சேதுராணி, திருச்சி சிவலிங்கம் - புஸ்பவள்ளி ஆகியோரின் சம்பந்தியும்,

அருணேஸ்வர், அச்சலன் ஆகியோரின் பாட்டானாரும்,

மேதனா, தக்ஷனா, ஆதித்தியா, ரட்சனா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-06-2026 புதன்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

அரவிந்தகுமார் (மகன்):- +94 77 763 4321
லெட்சுமண மோகன் (மருமகன்):- +94 77 224 0570

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2026 00:00)