Mrs. Arunasalam Selvarani

(ஓய்வுபெற்ற கணக்காளர் - இ.போ.ச)

Arunasalam Selvarani

Deceased: 26 September 2025

யாழ். வட்டுக்கோட்டை துணைவியைப் பிறப்பிடமாகவும், மாரீசன் கூடல் இளவாலை மற்றும் இல- 102/3/2, மனிங் பிளேஸ், கொழும்பு-06 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருணாசலம் செல்வராணி அவர்கள் 26-09-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - ஞானரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நரசிங்கம் - பார்வதி தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் (ஓய்வுபெற்ற கணக்காளர் - இ.போ.ச) அவர்களின் அன்பு மனைவியும்,

சோதிநாதன், தங்கராணி, தனலட்சுமி, யோகலட்சுமி, வர்ணலட்சுமி, ரஜனி ஆகியோரின் சகோதரியும்,

சோதீஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

பிரதீபன், கஜதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிருந்தை, வாணி ஆகியோரின் மாமியாரும்,

ஆரபி, ஷரன், ஷர்வின், ஒஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-09-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முததல் இரவு 8.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2025 04:00)