திரு. அருணாசலம் சத்தியசீலன் (சாந்தன்)

அருணாசலம் சத்தியசீலன் (சாந்தன்)

தோற்றம்: 13 ஏப்ரல் 1950 - மறைவு: 25 டிசம்பர் 2025

யாழ். மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் சத்தியசீலன் அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்தம்பி - பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,

விஜயராணி (ஓய்வுநிலை ஆசிரியை - யாழ்.மட்டுவில் கமலாசினி வித்தியாலயம்) அவர்களின் அன்பு கணவரும்,

கஜீபன், மயூரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மேரி ஜெக்லின், ஸ்ரீகலா ஆகியோரின் பாசமிகு பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சத்தியமுர்த்தி, கிருஷ்ணமுர்த்தி (சரசாலை), Dr. சத்தியானந்தா (இலண்டன்) அவர்களின் பாசமிகு சகோதரனும்,

இராஜேஸ்ரி, காலஞ்சென்ற விஜயலக்ஷ்மி ஆகியோரின் மைத்துனரும்,

சஞ்ஜே (மாணவன் - யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரி), தேனுஷன், சந்தோஷ், அனுசன் (மாணவர்கள்- யாழ். மட்டுவில் கமலாசினி வித்தியாலயம்), அக்ஷ்யா (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிமைகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2025 00:00)