Mrs. Arunthathi Thirunavukkarasu

Arunthathi Thirunavukkarasu

Date of Birth: 20 March 1957 - Deceased: 18 May 2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும், இருபாலை, களுபோவிலை தெகிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருந்ததி திருநாவுக்கரசு அவர்கள் இன்று 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் - அன்னபகவதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா - தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ரவீந்திரநாதன், கணநாதன், ஜெயதேவி ஆகியோரின் பாசத்துக்குரிய சகோதரியும்,

மகேஸ்வரி, சந்திரசேகரம், முத்துக்குமாரசாமி, திருவருட்செல்வன், சிவஜோதி ஆகியோரின் பாசமிகு அன்பு மைத்துனியும்,

திருமகள், காயத்திரி, நிரந்தரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வாகீசன், முகுந்தன், தயாபரன், சூரியலிங்கம், சுகந்தினி, மாதங்கி ஆகியோரின் நேசத்துக்குரிய மாமியாரும்,

சத்தியராணி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் நேசமிகு சிறிய தாயும்,

ரிஷிகேசன், நிருத்தியா ஆகியோரின் பாசமிக்க பெரியம்மாவும்,

கேசன்யா, கோபிகா, கோசிகன், சகன்யா, தனுக்ஷன், தரன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் தெகிவளை இல்லத்தில் 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 21-05-2025 புதன்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/05/2025 00:12)