(18-12-2025 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில்)

திருமதி. அருந்தவமலர் சுப்பிரமணியம்

அருந்தவமலர் சுப்பிரமணியம்

தோற்றம்: 06 டிசம்பர் 1947 - மறைவு: 14 டிசம்பர் 2025

யாழ். மானிப்பாய் வீதி, தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருந்தவமலர் சுப்பிரமணியம் அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா - பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் (வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

அற்புதமலர் அவர்களின் அன்புச் சகோதரியும்,

கணேஸ்வரனின் மைத்துனியும்,

ஜெயமோகன் (கணக்காளர் - அற்புதா ரேடிங் கொம்பனி), ராஜ்மோகன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் - கட்டடங்கள் திணைக்களம், யாழ்ப்பாணம்), சிவமோகன் (கனடா), கலைச்செல்வி, பாலமோகன் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

ரமா, துளசி (ஆசிரியை - உடுவில் மகளிர் கல்லூரி), கமலதாரணி (கனடா), தமிழ்மாறன் (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், சண்டிலிப்பாய்), விஜிதா (கனடா) ஆகியோரின் மாமியாரும்,

றோஜிகன், கவின்ராஜ், சர்வயன், சாமியா, சர்மிகா, காலஞ்சென்ற சாமந்தி, திருத்தணிகன், நிலாழினி, பவின், பவினிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

48-பிள்ளையார் கோவிலடி,

சுதுமலை மானிப்பாய் வீதி, 

தாவடி வடக்கு, கொக்குவில்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2025 00:00)