Mrs. Arunthavamani Tharmalingam

Arunthavamani Tharmalingam

Date of Birth: 17 October 1933 - Deceased: 14 May 2024

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், Walthamstow லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருந்தவமணி தர்மலிங்கம் அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-அன்னம் தம்பதியினரின் ஆசை மகளும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிறிகாந்தன் (அதிபர்), செல்வராணி (ஜேர்மனி), சின்றல்லா (கனடா), இன்பநேசன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புனிதராஜேஸ்வரி (பிரித்தானியா), தங்கராஜா (ஜேர்மனி), யோகேஸ்வரன் (கனடா), வளர்மதி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிஷாந்-விதுஷானி (பிரித்தானியா), விதுனா-ஐங்கரன் (பிரித்தானியா), சபீந்-கிஷாலினி (பிரித்தானியா), பபின்சி (ஜேர்மனி), டென்சி (ஜேர்மனி), ஜனுஸ்கா (கனடா), சுஜானுகா (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லவன்சிகா, மதுஷன், டியாரிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பார்வைக்காக Divinity Funeral Care (209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom) என்ற முகவரியில் 25-05-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வைக்கப்பட்டு, 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை Hendon Cemetery & Crematorium North Chapel (Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom) இல் நடைபெற்று, தகனக்கிரியைகள் நண்பகல் 12.00 மணியளவில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/05/2024 04:00)