செல்வன். அசோக்குமார் சிவசாய்ஸ்

அசோக்குமார் சிவசாய்ஸ்

தோற்றம்: 18 அக்டோபர் 2013 - மறைவு: 01 மே 2026

திருகோணமலை - ஈச்சந்தீவு கிண்ணியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். அசோக்குமார் சிவசாய்ஸ் அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், அசோக்குமார் (RDA மேற்பார்வையாளர்) - பிரதீபா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - தி/ஈச்சந்தீவு விபுலாநந்தா வித்தியலயம்) தம்பதியினரின் அன்பு மகனும்,

சாய்லஹ்மியின் பாசமிகு சாகோதரனும்,

காலஞ்சென்றவர்களான நாகநாதன், நேசம், ஆனந்தராசா மற்றும் காந்திமதி ஆகியோரின் பேரனும்,

லலித்தாராணி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - திருகோணமலை), சுதேஷ் நாதன், விஜிதரன் (பிரான்ஸ்), நிவேதா, சுஜீவன் (கனடா), கிஷாந்தன், சதுசனன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

மணிவண்ணனின் பெறாமகனும்,

சந்தோஸ், விதுஷன் ஆகியோரின் மைத்துனனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் உறவுப்பால வீதி, ஈச்சந்தீவு -03, கிண்ணியாவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சின்னதோட்ட இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2026 00:00)