திருமதி. பகவதிப்பிள்ளை தர்மலிங்கம்

பகவதிப்பிள்ளை தர்மலிங்கம்

தோற்றம்: 22 மார்ச் 1935 - மறைவு: 01 ஜனவரி 2021

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பகவதிப்பிள்ளை தர்மலிங்கம் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கையெய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பறுபதம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற காசிநாதன், வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காசிநாதன் தர்மலிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, செல்லையா, கதிரவேலு, பரிமளம், காமாட்சி, சிவக்கொழுந்து,
சாந்தநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

துகிதா மகேஸ்வரன்(பிரித்தானியா), தர்மலிங்கம் அங்கசன்(இலங்கை) ஆகியோரின் அருமைத் தாயாரும், 

 சபாநாயகம் மகேஸ்வரன், பிரியதர்ஷினி அங்கசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லாச்சி, அன்னலஷ்மி, சோமசுந்தரம், சுப்ரமணியம், செல்வராசா, காசிநாதன் சிவலிங்கம் மற்றும் தெய்வானைப்பிள்ளை முத்துத்தம்பி(இலங்கை), க.சிவஞானம்
(கனடா), பவானி சற்குணராசா(இலங்கை) மற்றும் சகுந்தலாதேவி காசிநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

அக்‌ஷயா, அனிஷ், யஷ்வின் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை மட்டுப்படுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும்.

 தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
துகிதா மகேஸ்வரன் - மகள் Mobile : +44 780 489 5456 Phone : +44 125 283 5460
தர்மலிங்கம் அங்கசன் - மகன் Mobile : +94 77 939 8810

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2021 06:36)