திருமதி. பாகிதா சங்கரலிங்கம்

பாகிதா சங்கரலிங்கம்

தோற்றம்: 25 ஜூன் 1975 - மறைவு: 01 மே 2025

யாழ். உரும்பிராய் செல்லத்துரை வீதியை பிறப்பிடமாகவும், Mississauga - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாகிதா சங்கரலிங்கம் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், சங்கரலிங்கம் லங்காதேவி தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற செல்லம்மா - தம்பிராசா, ராஜரட்ணம் - மகேஸ்வரி ஆகியோரின் பேத்தியும்,

சானுகன், சமீனன், சகீரன் ஆகியோரின் அன்பு தாயாரும்,

விஜித்தா, சஜேந்நிரன், துளசிகா, பாலசொரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்கந்தா, கத்திரின், தினேஸ், கிறிஸ்தோபர் ஆகியோரின் மைத்துனியும்,

இசான், இமைரா, கவின், தேவிகா, அனீக்கா, அஞ்சலி, கென்னடி, வெஸ்லி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

லூக், ஜேக்கப் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-05-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 04-05-2025 முற்பகல் 11:00 - 12:00 மணி வரையும் (St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2025 04:00)