Mr. Pakiyanathar Mariyathas
Date of Birth: 15 April 1938 - Deceased: 15 April 2025
யாழ். பெரியவிளான் இளவாளையைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாக்கியநாதர் மரியதாஸ் அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர் - றோசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அழகக்கோன் - எலிசபேத் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அக்னெஸ் அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மேரி யோசெப்பின், இரத்தினசிங்கம், துரைசிங்கம் மற்றும் பிலோமினா (கிளி - பெரியவிளான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யூடித் செரின், சுரேஷ், றமேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தெய்வீகதாசன், தர்ஷினி, செரிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமல றீற்றா, அல்பேட் பற்றிக், காலஞ்சென்றவர்களான பெனடிக்ற், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றொகான், றெகான், பிறினித், பிரத்தீஷா, ரியாஷா, ரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
லட்சுமி (அன்புடன் பராமரித்தவர்).
அன்னாரின் சரீரம் 18-04-2025 வௌ்ளிக்கிழமை காலை 9.00 - 6.00 பொரளை ரேமன்ட மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-04-2025 சனிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, பொரளை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
