திருமதி. பாலச்சந்திரன் அன்னம்மா

பாலச்சந்திரன் அன்னம்மா

தோற்றம்: 07 மார்ச் 1945 - மறைவு: 17 மார்ச் 2025

யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், இலண்டன் - Edgware வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலச்சந்திரன் அன்னம்மா அவர்கள் 17-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா - துரையம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்.

காலஞ்சென்ற பாலசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

தீபன், தீபா ஆகியோரின் பாசாமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தனபாக்கியம், பொன்னம்பலம், காலஞ்சென்ற தனலட்சுமி, பாலசிங்கம், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூமணி, இராசமணி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

சுயாதாரன், லக்சனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்ஸன், நிருக்சன், தீக்சிதா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:30 - 3:30 மணி வரை Barnet Multi Cultural Community Centre Ltd (Hendon Sports Centre (Youth Community Centre (Algernon Rd, London NW4 3TA, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd London NW7 INB, United Kingdom) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/03/2025 04:00)