திருமதி. பாலசந்திரன் பாரததேவி

பாலசந்திரன் பாரததேவி

மறைவு: 31 மே 2024

யாழ. வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையை பிறப்படமாகவும், தற்பொழுது சிவபுரவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலச்சந்திரன் பாரததேவி இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம்-மாரிமுத்தம்மா தம்பதியினரின் இளைய மகளும்,

காலஞ்சென்ற ஐய்யாத்துரை-மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திரு. பாலச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

விஜயகௌரி, பால்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கார்த்திகேசன், வேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலகணேசன், மயூரி, சுஜிதா, ரமணாகரன், அகில்லன், அனிதா ஆகியோரின் அன்பு அம்மாச்சியும்,

ஜனார்த்தனன், ருஷான், லக் ஷிகா, அபிவாஷினி ,அபிலாஷினி ஆகியோரின் பாசமிகு அப்பாச்சியும்,

ஓவியா, இனியா, அவந்திகா, ஆதித்யா, அதிதி, அகவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற தங்கராசா, வள்ளிக்கொடி, குமரகுருசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபுர வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் ஊறணி இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/05/2024 04:00)