திருமதி. பாலதேவி கண்ணதாசன்
தோற்றம்: 05 நவம்பர் 1965 - மறைவு: 23 செப்டம்பர் 2024
மலேசியா Taiping ஐப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலதேவி கண்ணதாசன் அவர்கள் 23-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஆத்தர் ரொபேட் (Robert)-தங்கேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,
ஐயாத்துரை-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நீர்வேலி கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த கண்ணதாசன் (கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியா, சங்கீதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்னேஸ்வரன்-புஸ்பா, விஜயகுமாரன்-ஆண்டாள், பாலதேவன்-கத்தரின் மிசி.ஜாலின் (Catherine Misi Jalin), ரதிதேவி-ரவிசந்திரன், சிவனேசராஜா- சரளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகுணா-பாலாபரணம், காலஞ்சென்ற ரவி-அருணா, சுசி-யோகானந்தா, கலா-கருணாகரன், ஜீவா-நிர்மலகாந்தன், மோகன்-உஷா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நந்தினி-ராஜ், நேசன்-Zoe ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-09-2024 சனிக்கிழமை மாலை 5.00-9.00 மணி வரையும், 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00-900 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
