திருமதி. பாலாம்பிகை ஸ்ரீதரன்
தோற்றம்: 03 பெப்ரவரி 1946 - மறைவு: 29 ஜூலை 2022
யாழ். சுன்னாகம் உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலாம்பிகை ஸ்ரீதரன் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அருணாசலம், சோதிப்பிள்ளை(கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருணாசலம் ஸ்ரீதரன்(JP- தீவு முழுவதும், ஓய்வுபெற்ற பொறியியல் உதவியாளர்- தேசிய நீர்வடிகாலமைப்புச் சபை) அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளினி (சுருக்கெழுத்தாளர்- நீதவான் நீதிமன்றம், சாவகச்சேரி), நளாயினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சத்தியமூர்த்தி (நிர்வாக உத்தியோகத்தர்- மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), விஜயராஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யனந்தினி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- சுகாதார அமைச்சு, வட மாகாணம்), தயூரன், தரணியா, டிலக்சனா, கருணியா, கார்த்திக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இராஜேஸ்வரி- சர்வேஸ்வரன், கமலேஸ்வரி, மகேஸ்வரி- ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கௌசலாதேவி அரியரட்ணம்(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன்(முன்னாள் அதிபர்)- சர்வேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் மைத்துனியும்,
தாரணி- விஷ்ணுகாந்தன், Dr.கோபிசங்கர், ராம்சங்கர், ராஜினி, வினோத்சங்கர், நிரோயினி, பிரியந்தி, துஷ்யந்தி ஆகியோரின் பெரியம்மாவும்,
ரவிசங்கர் (கனடா), சாமினி (லண்டன்), மாலினி (கனடா) ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று, அதனைதொடர்ந்து தாவடி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:-
www.tamilthakaval.org
