திரு. பாலமுத்து அமிர்தலிங்கம்
தோற்றம்: 17 ஜனவரி 1942 - மறைவு: 04 செப்டம்பர் 2025
பதுளை - லுணுகலை ஒப்டன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விஜயாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
பாலகிருஸ்ணன் (குமரன்ஸ், கொழும்பு -13), புவனேஷ்வரன் (சிவா - சரவணாஸ், கொழும்பு -13) ஆகியோரின் தந்தையும்,
விஜயகுமாரி, ராஜலக்ஷுமி ஆகியோரின் மாமனாரும்,
கவின், கிருஷாந்த், கவிதாஞ்சலி, விதுர்ஷாலினி, அபிலாஷினி, ஹேம்பிரதாப் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-09-2025 சனிக்கிழமை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
